ஆந்திராவில் பேத்தி முறை என்று கூட பார்க்காமல் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள மார்சாரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராவ். அவரது மனைவி ரேணுகா. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுக்கு 5 பெண் குழந்தைகள்.
பாபுராவ் தனது உறவினரான ஜகாங்கிர் என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அவர் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறினார். இதையடுத்து கடனுக்காக தனது மூத்த மகள் மீனா (13). 3வது மகள் உமா (7) ஆகியோரை ஜகாங்கிரிடம் அடகு வைத்தார். ஜகாங்கிர் சிறுமிகளுக்கு தாத்தா முறை ஆகும்.
ஜகாங்கிர் ஊர், ஊராகச் சென்று விவசாய கருவி தயாரித்து விற்பவர். அவர் சிறுமிகளுடன் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள தாவன்பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் சிறுமிகளிடம் கடுமையாக வேலை வாங்கியதைப் பார்த்து அப்பகுதி மக்கள் பரிதாபப்பட்டனர். சிறுமிகளிடம் இப்படியா வேலை வாங்குவது என்று தட்டிக்கேட்டபோது தான் அவர்கள் அடமானம் வைக்கப்பட்டது தெரிய வந்தது.
கடனுக்காக பெற்றோரே தங்களை விற்றுவிட்டதாகக் கூறி சிறுமிகள் அழுதனர்.
இது குறித்து உமா கூறுகையில்,
பகலில் எவ்வளவு வேலை வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆனால் இரவு நேரத்தில் தாத்தா கொடுக்கும் செக்ஸ் தொல்லையை தாங்க முடியவில்லை. அதனால் இரவு வந்தாலே பயமாக உள்ளது என்று கூறி கதறி அழுதார்.
இது குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். உடனே போலீசார் ஜகாங்கிரை கைது செய்து சிறுமிகளை மீட்டனர். சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படவிருக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக