புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலி, அல்பிட்டிய பொத்திவல மகா வித்தியாலயம் திடீரென மூடப்பட்ட சம்பவத்திற்கு பெற்றோர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் திருமணம் நேற்று (14) இடம்பெற்ற நிலையில் அவ் வைபவத்திற்கு கலந்து கொள்வதற்காக பாடசாலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் 2,500 மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில்  குறித்த பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது,

பாடசாலை ஆசியர்களில் அதிகமானொர் திருமண வைபவத்திற்கு செல்வதற்கு தீர்மானித்த நிலையில் பாடசாலை நேற்று மாத்திரம் மூடப்பட்டதாக தெரிவித்தார்.

நேற்றைய தினத்திற்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அல்பிட்டி வலய கல்விப் பணிமனை மற்றும் மாவட்ட கல்வித் திணைக்களம் இதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அப் பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார்.

எப்படி இருப்பினும் ஆசிரியை ஒருவரின் திருமண வைபவத்திற்காக பாடசாலை மூடப்பட்டமையின் காரணமாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top