யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலின் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோவில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட திருடர்களில் ஒருவர் பெறுமதியான தொலைபேசியை அதே இடத்தில் விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இந்த தொலைபேசியைப் பயன்படுத்தி உண்டியல் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சுதுமலை தெற்கைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக