புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிம்புவும், ஹன்சிகாவும்  வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


சமீபத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் இருந்த ஹன்சிகாவை பார்ப்பதற்காக சிம்பு ஐதராபாத் வந்ததாகவும், அங்குள்ள ஹோட்டலில் இருவரும் சந்தித்து பேசியதாகவும் ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹன்சிகா தற்போது பிசியான நடிகையாக உள்ளார். 7 படங்கள் கைவசம் உள்ளன. தமிழில் சிம்பு படங்கள் தவிர ஆர்யாவுடன் சேட்டை, சூர்யா ஜோடியாக ´சிங்கம்-2´, கார்த்தியுடன் பிரியாணி, சுந்தர்.சி. இயக்கும் ´தீயா வேலை செய்யனும் குமாரு´ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ´நம்பர் ஒன்´ இடத்தை நயன்தாரா தக்க வைத்துள்ளார். அந்த இடத்தை ஹன்சிகா தட்டி பறிப்பார் என்கின்றனர். ´குட்டி குஷ்பு´ என்றும் வர்ணிக்கிறார்.

சிம்புவும், ஹன்சிகாவை புகழ்ந்து பேசி வருகிறார். ரகசியமாக உள்ள சிம்பு, ஹன்சிகா காதல் விஷயம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று ஐதராபாத்தில் ஹன்சிகாவிடம் நிருபர்கள் கேட்டபோது, சிம்புவுக்கும், எனக்கும் காதல் என்பது வதந்தி. நட்பாகதான் பழகுகிறோம் என்று வழக்கமாக நடிகைகள் சொல்லும் பதிலையே சொன்னார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top