யாழ். நகரின் பிரபல தனியார் பாடாசலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் மீது அப்பாடசாலையின் ஆசிரியர் தாக்கியதனால் மாணவரின் செவிப்பறை உடைந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த தனியார் கல்லூரி ஆறாம் ஆண்டில் கல்வி பயிலும் கோண்டாவிலைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த மாணவன், யாழ். போதனா வைத்தியசாலையின் 11ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த திங்கட்கிழமை குறித்த மாணவன் தவணைப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு பி.ப. 1.00 மணியளவில் பாடசாலையில் தரித்திருந்த வேறு மாணவர்களுடன் குழுவேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எழுந்து நின்றுள்ளான்.
அங்கு வந்த குறித்த ஆசிரியர் கையால் மாணவரின் கன்னத்தில் தாக்கியதாகவும் இதன் காரணமாகவே மாணவனது செவிப்பறை உடைந்தாகத் தெரியவருகின்றது.
இந்தச் சம்பவம் குறித்து யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பாடசாலையின் அதிபரும் கொழும்பு சென்றிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக