கத்தோலிக்க திருச்சபையின் 265வது போப் 16ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பெப்ரவரியில் தனது பதவியிலிருந்து விலகினார்.
அதன் பின்னர் ரோமில் உள்ள காஸ்தல்
கந்தொல்பொ இல்லத்தில் அவர் ஓய்வெடுத்து வருகின்றார். இந்நிலையில், கடந்த மாதம் 23ம் திகதி தற்போதைய போப் பிரான்சிஸ் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது இருவரும் உரையாடிய மற்றும் சேர்ந்து பிரார்த்தனை செய்த காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன.
அதில் முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டுள்ளார். மேலும் போப் 16ம் பெனடிக்டின் உடல்நிலை கடந்த 2 வாரங்களாக மிகவும் மோசமடைந்து வருவதாகவும், அவர் தனது இறுதி நாட்களை நெருங்கி வருவதாகவும் ஸ்பெயினைச் சேர்ந்த வாடிகன் நிருபர் பலமோ கோமஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை வாடிகன் நிர்வாகம் இதுவரை மறுக்கவோ, உறுதிபடுத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக