புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பதவி உயர்வு பெறுவதற்காக, தன் கணவர், அவரது உயர் அதிகாரிகளிடம் தன்னை அனுப்பி, முறைகேட்டில் ஈடுபட்டார்' என, கடற்படை அதிகாரியின் மனைவி, போலீசில் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


கொச்சி துறைமுக போலீசாரிடம், பெண் ஒருவர், கொச்சி கடற்படையில் பணியாற்றும் அதிகாரியான தன் கணவர் மற்றும் அவருடன் பணியாற்றும், 10 அதிகாரிகள், பாலியல் தொந்தரவு செய்வதாக கூறி புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது:கடற்படையில் அதிகாரியாக உள்ள என் கணவர், தன் பதவி உயர்வுக்காக, அவரது உயர் அதிகாரிகளிடம் என்னை அனுப்பினார்.

கடந்த, இரண்டு மாதம் நடக்கும், இந்த கொடுமையை நான் எதிர்த்தேன்; அதற்காக என்னை அடித்து துன்புறுத்தினார். எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை, போலீசார் என் முன் நிறுத்தினால், அவர்கள் யார் யார் என, அடையாளம் காட்டுவேன்.இவ்வாறு, புகாரில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, கொச்சி கடற்படை அலுவலகத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, "கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. கணவரிடம் இருந்து விவாகரத்து பெற, அப்பெண் அபாண்டமாக புகார் தெரிவித்துள்ளார்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையேயுள்ள பிரச்னையை தீர்த்து வைக்க, ஆலோசனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போதும், அப்பெண் கணவர் மீது புகார் தெரிவித்தார்' என, கூறப்பட்டது.

இதுகுறித்து அப்பெண்ணிடம் கேட்டபோது, "கடற்படை தரப்பில் கூறப்படுவது போல், நான் ஆலோசனை பெறுவதற்காக செல்லவில்லை.

என் கணவரை காப்பாற்றுவதற்காக முயற்சிக்கின்றனர். என் கணவர் முன் ஜாமின் கோரி, கேரள ஐகோர்ட்டை அணுகியுள்ளார்' என்றார்.

இதைத் தொடர்ந்து, அப்பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட கொச்சி துறைமுக போலீசார், அப்பெண்ணின் கணவர் மற்றும் 10 அதிகாரிகளுக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top