புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் தனுஷ் நடிக்கும் 'மரியான்' படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மரியான்' படத்தின் விளம்பரத்தில் தனுஷ் புகை பிடிக்கும் காட்சி முதன்மைப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது.

புகை பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெறுவது, இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தனுஷ் புகைபிடிக்கும் விளம்பரக் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, "மரியான்' படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்க வேண்டும். ரஜினிகாந்தின் நல்ல முன் உதாரணத்தை தனுஷ் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top