யாழ். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம் யுவதியை மூன்று பேர் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளதாக யாழ். சிரேஸ்ட
பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
இளம் யுவதியைக் கடத்தியவர்கள் தொடர்பில் குறித்த பெண்ணின் தாயார் கொடுத்த முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து, விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு குறித்த யுவதி கடத்தியவர்கள் தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் பெறப்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
இந்தக் கடத்தலில் தொடர்புடைய மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யுவதியை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மூவரில் இருவர் தலைமறைவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக