புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் சிவா (எ) சிவன் (33). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுடைய மகன் முனியப்பன் (7). சிவனுடன் அவரது தாய் சுசீலா (60)
வசிதார். பெங்களூரில் வேலை செய்யும் சிவன், அவ்வப்போது ஊருக்கு வருவார். யுகாதி விடுமுறையால் ஊருக்கு வந்த சிவன், நேற்று நண்பர்களுடன் மது குடித்துவிட்டு, இரவு 8 மணியளவில் வீட்டுக்கு சென்றார்.

வீட்டு மாடியில் இருந்த மனைவி ராஜேஸ்வரியுடன் குடும்ப தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிவன், மாடியில் கிடந்த செங்கல்லை எடுத்து மனைவி மீது ஆவேசமாக வீசினார். சத்தம் கேட்டு மாடிக்கு ஓடினார் சுசீலா.

அப்போது சிவன் வீசிய செங்கல் சுசீலா முகத்தில் பட்டது. நிலை குலைந்த அவர் அதே இடத்தில் விழுந்தார். சிறிது நேரத்தில் சுசீலா பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த மகனும் மருமகளும் கதறி அழுதனர்.

அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து மாரண்டஹள்ளி விஏஓ ராமச்சந்திரன், போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top