இந்தியா-டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கட்டிய மனைவியை தனது உறவினர்கள் இருவருடன் சேர்ந்து ஓடும் காரில் வைத்து கற்பழித்துள்ளார் ஒரு கணவர்.
கேட்கவே காது கூசும் இந்த சம்பவத்தில் சிக்கிய பெண்ணுக்கு 20 வயதுதான் ஆகிறது. புதன்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.
கற்பழிப்புக்குப் பின்னர் அப்பெண்ணை நஜப்கர் பகுதியில் சாலையோரமாக போட்டு விட்டுச் சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அந்தப் பெண்ணை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவரிடம் பின்னர் விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவல்கள்...
அப்பெண்ணின் கணவர் பெயர் இந்தர்ஜித். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். சம்பவத்தன்று காரில் இந்தர்ஜித்துடன் கிளம்பியுள்ளார் இப்பெண். அவர்களுடன் இந்தர்ஜித்தின் உறவினர்கள் 2 பேரும் வந்துள்ளனர்.
வழியில் தனக்கு இந்தர்ஜித் குளிர்பானம் கொடுத்ததாகவும், அதைக் குடித்தவுடன் தனக்கு மயக்கம் வந்து விட்டதாகவும் கூறினார் அப்பெண். பின்னர் இந்தர்ஜித்தும், அவரது உறவினர்கள் இருவரும் தன்னை மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது போலீஸார் அனைவரையும் கைது செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக