புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ரஷ்யாவின் எஸோ நகர் அருகே 359 கிலோமீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 601 கி.மீ
ஆழத்தில் எற்பட்ட இந்த நிலநடுக்கம், ரஷ்யாவின் கிழக்கே உள்ள ஒகோட்ஸ்க் கடலில் மையம் கொண்டிருந்தது.

கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சகலிக் மற்றம் குரில் தீவுகளுக்கு ரஷ்ய புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை  விடுத்தது. ஆனால் 10 நிமிடங்களில் இதனை திரும்பப் பெற்றது.

இதன் அதிர்வுகள் மாஸ்கோ நகரத்தின் மத்தியப் பகுதி, சைபீரியா உள்ளிட்ட ரஷ்யாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. அப்போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
 
Top