சமீபத்திய பரபரப்பு நடிகையான ஸ்ருதிஹாசன், தற்போது பிரபுதேவா இயக்கிவரும் ராமையா வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கெனவே பல படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், இப்படத்தில் தெலுங்கு, இந்தி என இரண்டு பதிப்புகளிலும் நடித்து வருகிறார்.
நடிப்பில் பரபரப்பாக இருக்கும் ஸ்ருதி திகதி தரும் நாட்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகவேகமாக படமாக்கி வருகிறாராம் பிரபுதேவா.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகளை ஐதராபாத்தில் நடத்தியிருக்கிறார் பிரபுதேவா.
ஒரு நீச்சல் குளத்தில் நின்றபடி அவர்கள் பேசிக் கொண்டிருப்பது போல் காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து விட்டாராம் ஸ்ருதிஹாசன்.
இதனால் அவரது கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டு, ரத்தம் வழிந்திருக்கிறது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ஸ்ருதி, அன்று ஒருநாள் மட்டும் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மறுநாள் படப்பிடிப்பு கலந்து கொண்டாராம்.
அவர் நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த காரணத்தினால் அதன் பின்பு அந்த காட்சியையே வேறு லொகேஷனில் படமாக்கினாராம் பிரபுதேவா.