புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.

அறிமுகமான படத்தில் மாமனார், மருமகள் கள்ளக்காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இதில் கணவனுக்கு துரோகம் செய்து அவன் தந்தையுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருந்தார்.

அந்த படத்தில் நடித்தது பெரிய தவறு என்றும் இனிமேல் அது மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் என்று அமலாபால் கூறினார்.

இதுகுறித்து அமலாபால் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு அனுபவம் இல்லை. கதை முழுவதையும் கேட்காமல் என் கதாபாத்திரத்தை மட்டுமே தெரிந்து கொண்டு நடித்தேன்.

அப்படி நான் நடித்த படம் தான் சிந்து சமவெளி. இதற்காக நிறைய விமர்சனங்கள் வந்தன வருத்தப்பட்டேன். ஆனால் இனிமேல் சர்ச்சைகளில் சிக்க மாட்டேன்.

தற்போது நடிக்கும் படங்களில் கதைகளை முழுவதுமாக கேட்டு, எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே சம்மதிக்கிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கும் எனக்கு மைனா படம் திருப்புமுனையாக அமைந்தது.

இரண்டு கதாநாயகிகள் படங்கள் நடிப்பதில் வருத்தம் இல்லை. சிறிய கதாபாத்திரம் வந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். சிரஞ்சீவி மகன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினேன் அது சிறப்பாக இருந்தது.

படங்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் சிறப்பாக நடிக்க முடியும்.

சித்தார்த்துடன் நடித்த போது எங்களுக்குள் கெமிஸ்ட்ரி அற்புதமாக இருந்தது. இதனால் படம் வெற்றி பெற்றது. கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன்.

நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்குள்ள வாய்ப்பை யாரும் பறிக்க முடியாது. நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
Top