புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சல பொக்குன வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தில் ஒரு வயதும் நான்கு மாதமுமான குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் ஒன்றை பின்னால் செலுத்த முயன்றபோது குறித்த குழந்தை ஜீப்புக்குள் நசுங்குண்டு உயிரிழந்துள்ளது.

இன்று (24) காலை 10.45 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த குழந்தை தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

அதிதீவிர சிகிச்சைப் பரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை பகல் 12 மணியளவில் உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின் தந்தையே ஜீப் வண்டியை பின்னால் செலுத்தியதாக பொலிஸர் தெரிவித்தனர்.

தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
Top