தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 6 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தும்மலசூரிய, சியம்பலாகஸ்ரூப்ப பிரசேத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன்புறத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சிறுவன் இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த சிறுவன் கல்முருவ பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில் தும்மலசூரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.