புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குடும்ப பிரச்னையில் மருமகளை கல்லால் அடித்து கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியை சேர்ந்தவர் பாபு.



பெங்களூருவில் தனியார் கம்பெனியில் வேலை செ#து வருகிறார். இவரது மனைவி அனிதா, 28. திருமணமாகி நான்கு ஆண்டு ஆகிறது. இரண்டு வயதில், தனேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

சொத்து பிரித்து கொடுக்காததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, பாபுவும் அவரது மனைவி அனிதாவும், அதே பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அனிதாவிற்கும், மாமனார் ராமன், 65, என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ராமன், கருங்கல்லால் அனிதாவை தாக்கினார்.

தலையில் பலமாக தாக்கப்பட்டதால், அதே இடத்தில் மயங்கி விழுந்து அனிதா இறந்தார்.

தகவலறிந்த மயிலாடுதுறை பொலிசார், சம்பவ இடம் சென்று, அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்,
 
Top