ஹிங்குராங்கொட பஸ் நிலையத்திற்கு அருகில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (21ம் திகதி) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 23 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நேற்று (22) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹிங்குராங்கொட பொலிஸார் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.