சேலத்தில் ஆபாசப்படம் எடுத்து 2 குழந்தைகளின் தாய்க்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த காமக்கொடூரன் கைது செய்யப்பட்டான்.
சேலம் கே.ஆர்.தோப்பூர் கோணகாபாடியை சேர்ந்த தேவி (27) காவல்துறையில் அளித்த புகாரில் எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். என் கணவர் சிவில் இன்ஜினியர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாரமங்கலம் கருங்கல்வாடியை சேர்ந்த பூபதி (28) என்பவர் அவரது பிசினசில் சேர்ந்து கொள்ளும் படி கூறி கிருஷ்ணகிரியில் நடக்கும் மீட்டிங்கிற்கு காரில் என்னை அழைத்து சென்றார்.
அப்போது அவர் எனக்க்கு பழச்சாறில் மயக்கமருந்து கொடுத்து காரிலேயே என்னை கற்பழித்து வீடியோ படம் எடுத்து கொண்டார். அந்தப் படத்தை இண்டெர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும், கணவரிடம் காண்பித்து விடுவதாக கூறி என்னை அவர் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து என் கணவருக்கு எதிராக காவல்துறையில் புகார் கொடுக்க வைத்தார்.
இதனால் என் கணவர் மற்றும் குடும்பத்தினர் என்னை விட்டு பிரிந்த நிலையில் 8 மாதமாக என்னை வீட்டில் அடைத்து வத்து சித்ரவதை செய்து செக்ஸ் டார்ச்சர் செய்து கொடுமைப்படுத்தினார். திருமணமாகி ஒரு குழந்தை உள்ளவர் பூபதி. இவர் பல பெண்களையும் இதே போல் ஏமாற்றி வருகிறார். பூபதியிடமிருந்து தப்பித்து என் கணவரிடம் நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறினேன். அவர் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
கணவர், குழந்தைகளுடன் ஒரு மாதமாக சேர்ந்து வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் பூபதி அவர் எடுத்து வைத்திருந்த வீடியோ படத்தை வெளியிட்டுவிடுவதாக மிரட்டி ரூ.5 லட்சம் கேட்டு பிளாக்மெயில் செய்வதுடன், என் கணவர், குழந்தைகளை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகிறார். காமக்கொடூரன் பூபதியிடமிருந்து என்னை காப்பாற்றி அவரிடம் உள்ள வீடியோ, புகைப்படங்களை மீட்டு தகுந்த விசாரணை மேற்கொண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
தேவி அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்த எஸ்.பி.சக்திவேல் உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய தாரமங்கலம் காவல்துறையினர் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.