ரஜினி, விஷாலை தொடர்ந்து சிம்புவும் இமயமலை ஏறிவிட்டார். ஆன்மீகம்தான் எனக்குள் இருக்கிற என்னை அடையாளம் காட்டுகிறது என்றெல்லாம் சமீபமாக சொல்லத் தொடங்கினார்
சிம்பு. சரி, தனியாக இருப்பதால் அப்படியெல்லாம் சாயா... மாயா... தோன்றியிருக்கலாம் என்றுதான் நினைத்தனர். ஆனால் உண்மையாகவே இமயமலைக்கு கிளம்பினார். இப்போது போட்டோவும் ரிலீஸாகியிருக்கிறது.
ரஜினி பிளைட்டில் பயணித்து கிழிந்த கதர் சட்டையுடன் மலையேறினார் என்றால் சிம்பு செம கலக்கல் கெட்டப். இமயமலையிலும் இவர்களை தொடர்ந்து வந்து பத்திரிகைக்காரர்கள் போட்டே எடுக்கிறார்களா இல்லை இவர்களே போட்டோ எடுத்து பத்திரிகைக்கு தருகிறார்களா?
விஜய் டிவியில் சிம்புவின் இமயமலைப் பயணம் என்று தொடர் வராமலா போகும்.
சிம்பு இமயமலை, ஆன்மீகம்