ஐபிஎல் விளையாட்டல்ல, சூதாட்டம் என தெரிய வந்த பிறகு ராயின் பெயர் கொஞ்சம் அழுத்தமாக அடிபடுகிறது. எந்த கிரிக்கெட் வீரருடனும் எனக்கு தொடர்பில்லை, அப்படி எழுதுவது வருத்தம் தருகிறது என்று சொன்ன பிறகும் யாரும் கண்டு கொள்வதாக இல்லை. அழகிகளை வருத்தப்பட வைப்பதில் நமக்கு ஒருவித ஆனந்தம்.
சமீபத்தில் தினசரி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தானொரு தொழில் அதிபரை காதலிப்பதாக ராய் தெரிவித்தார். ஆனால் ஆளை மட்டும் சொல்ல மாட்டேன் என ஒரு அடிஷனல் குறிப்பு. இருவருக்குமான அண்டர்ஸ்டேண்டிங் ஓகே ஆன பிறகு தெரிவிப்பாராம்.
கிரிக்கெட் வீரர்களுடன் சேர்த்து ராயின் பெயர் அடிக்கடி பவுண்டரிக்கு வெளியே தூக்கப்படுவதால் அதனை சமாளிக்க ராய் உருவாக்கிய கற்பனை காதலர்தான் அந்த தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது.