புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ரஷ்யாவில் உள்ள குப்பை கிடங்கில் வீசப்படிருந்த குளிர்சாதனப்பெட்டிக்குள் ஒரு இளம்பெண்ணின் சடலம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மாஸ்கோவில் இளம்பெண்ணின் பிரேதத்துடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 'ஃபிரிட்ஜ்' பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று அந்த குப்பை கிடங்குக்கு வந்த வாகனத்தில் இருந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், ஒரு குளிர்சாதனபெட்டியை அங்கு வீசிவிட்டு சென்றனர்.

பழுதடையாத குளிர்சாதனப்பெட்டியை குப்பையில் வீசியதால் சந்தேகித்த அப்பகுதி மக்கள், அக்குளிர் சாதனப்பெட்டியை திறக்க முயன்றனர். அப்போது அதில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் ஒரு இளம் பெண்ணின் பிரேதம் இருந்ததை பார்த்து திடுக்கிட்டனர்.

சுமார் 25 -30 வயது இருக்கும் அப்பெண்ணின் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. பிரேத பரிசோதனையில் அப்பெண் 2 நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த பெண் யார், இக்கொடூர செயலை செய்தது யார், என்னும் கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
Top