கடந்த 26ஆம் திகதி பிற்பகல் வேளையில் முச்சக்கர வண்டி ஒன்று மற்றும் மோட்டார் வண்டியில் சென்ற ஆறு பேர் குறித்த சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இதுவரை இவர்களில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளின்போது நேற்று (27) சந்தேகநபர்கள் இருவரும் இன்று (28) ஒருவரும் கைது செய்யப்டப்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (28) நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.