புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் ஒரு கழிவறை குழாயிலிருந்து பச்சிளங்குழந்தை ஒன்று சிக்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக குறுகலாக இருந்த அக்குழாயின் உள்ளே அக்குழந்தையை எப்படி நுழைத்திருக்கமுடியுமெனவும்,
அக்குழந்தையின் பெற்றோர் யார் என்னும் கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.


சீனாவின் புய்ஜியான் மாகணத்தில் இருந்த ஒரு பொது கழிப்பிடத்தில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற மீட்பு படையினர், பல மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் ஒரு பச்சிளங்குழந்தை கழிவறையின் குழாயின் உள்ளே இருந்ததை கண்டறிந்தனர்.

குழந்தை ஒரு இக்கட்டான நிலையில் அந்த குழாயின் உள் இருந்ததை அறிந்த மீட்பு குழுவினர், அக்குழாயில் குழந்தை சிக்கியிருந்த பகுதியை பொறுமையாகவும், கவனத்துடனும் வெட்டி எடுத்தனர்.

வெறும் 10 செ. மீட்டர் மட்டுமே இருந்த அக்குழாயில் இருந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக மீட்கபட்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது,அக்குழந்தை இன்குபேட்டரில் வைக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறது எனவும் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிகிறது.

மிக குறுகலாக இருந்த அக்குழாயின் உள்ளே அக்குழந்தையை எப்படி நுழைத்திருக்கமுடியுமெனவும், அக்குழந்தையின் பெற்றோர் யார் என்னும் கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது.
 
Top