புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் ஓசூரில் கர்நாடக பல்கலைக் கழக தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்த மாணவியின் ஆடைகளைப் பிடித்து இழுத்து மோசமாக ரௌடி போல் நடந்து கொண்ட ஆசிரியர் மற்றும் 4 மாண்வர்களை போலீசார் தேடி
வருகின்றனர்.

கர்நாடகா திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார் சந்தியா கமல் (வயது 22), டற்போது தேர்வு நடைபெற்றுவருகிறது.

இதற்காக ஓசூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. அவருக்கு தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத மாணவி சந்தியா கமல் 19ஆம் தேதி ஓசூர் வந்தார். அப்போதுதான் சில மாணவர்களும் ஆசிரியர் போல் தெரிந்த ஓருவரும் அவரது ஆடைகளைப் பிடித்து இழுத்து அசிங்கமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். ஆனால் மாணவி தரப்பிலிருந்து புகார் எதுவும் இல்லாததால் போலீசார் இவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

ஆனால் நேற்று மாணவி சந்தியா கமல் போலீஸில் அதிகாரபூர்வமாக புகார் செய்தார். இது தொடர்பாக அவர் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நான் செமெஸ்டர் தேர்வு எழுத ஓசூர் தனியார் ஐ.டி.ஐ. தேர்வு மையத்துக்கு வந்தேன். என்னிடம் அறைக்கட்டணம் என்று ரூ.500 கேட்டனர். மேலும் தேர்வில் உங்களுக்கு நாங்கள் உதவி செய்வோம் என்று கூறினார்கள். தேர்வு தொடங்கியதும் புத்தகங்களை வைத்து மாணவர்கள், மாணவிகள் பரிட்சை எழுதினர்.

இதை எனது தந்தை கவனித்தார். ஒரு பல்கலைக்கழக தேர்வு இப்படி முறைகேடாக நடக்கிறதே என்று அவர் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்தார். இதனை தேர்வு மைய ஆசிரியர் கவனித்தார்.

புகைப்படம் எடுத்தது எனது தந்தை என்று அறிந்த ஆசிரியர் எனது ரோல் நம்பர் எனது தந்தையின் பெய முதலிய விவரங்களை வாங்கினார். மேலும் என்னை மிரட்டியதால் நான் தேர்வு மையத்திலிருந்து வெளியேறினேன்.

உடனே 4 மாண்வர்களை அனுப்பி என்னை இழுத்து வரச்சொன்னார். நான் கிருஷ்ணகிரி பிரிவு ரோடு அருகே நடந்து செல்லும்போது அவர்கள் எனது கையைப்பிடித்தும் ஆடைகளை பிடித்தும் இழுத்தனர். நான் கூச்சலிட்டேன், என்னை அங்கிருந்தவர்கள் காப்பாற்றினார்கள். நான் பிறகு சென்றுவிட்டேன்.

தேர்வில் முறைகேடு செய்கிறார்கள். தட்டிக் கேட்டால் பெண் என்றும் பாராமல் என்னை நடு ரோட்டில் அவமானப்படுத்தியுள்ளார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் தன் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top