புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விஷமூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை தேறி வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரவிக்கின்றன.


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவு, வேப்பவட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் வழிமறிக்கப்பட்டு விஷமூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர், கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த மாணவி தன்னாமுனையிலுள்ள பாடசாலைக்குச் சென்று விட்டு வீடுத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் இவ்வாறு தனது மகளை வழிமறித்து விஷத்தை ஊட்டியுள்ளதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மயங்கிய நிலையில் வீதியருகே வீழ்ந்து கிடந்த தனது மகளை வீதியால் சென்ற லொறிச் சாரதி கண்டு முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி சென்று உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும், பின்னர் உறவினர்கள் தனது மகளை உடனடியாக கரடியனாறு வைத்தியசாலையில் சேர்ப்பித்ததாகவும் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வைத்தியசாலைப் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top