பாகிஸ்தானில் சினிமா நடிகை ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. படுகாயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் சில படங்களில் நடித்திருப்பவர் புஷ்ரா (18). இவர் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
இவர் நேற்று இரவு அவரது இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒருவன், வீட்டுக்குள் புகுந்து புஷ்ரா முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பியுள்ளான் என்று அவரது சகோதரர் கூறியுள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகம், கழுத்து ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது சகோதரர் அளித்த புகாரில், உள்ளூர் நாடக தயாரிப்பாளர் ஒருவர், புஷ்ராவை மணந்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அதற்கு புஷ்ரா மறுப்புத் தெரிவித்ததால், அவர்தான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக