புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்கா, ஒஹியோவில் ஒரு வீட்டில் தாயும், அவளுடைய 5 வயது குழந்தையும் பாம்புகள், நாய்களுடன் சுமார் 2 ஆண்டுகளாக அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சம்பவமொன்று
நடந்துள்ளது. இந்த பாதிப்புக்கு ஆளான பெண்ணின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

பாம்பு, நாயுடன் தங்கியிருக்கும் போது குழந்தையுடன் தாயை சேர விடாமல் தடுத்தனர். அப்படியும் அவள் தனது குழந்தைக்கு ரகசியமாக உணவு, தண்ணீர் கொடுத்திருக்கிறார்.

பலமுறை பெண்ணை பாம்புகளும், நாயும் கடித்திருக்கிறது. இதற்காக அவளுக்கு வலி நிவாரண மாத்திரை கொடுத்திருக்கிறார்கள்.

அந்த பெண் எப்படியோ வெளியே தப்பி வந்தது இனிப்பு பொருட்களை திருடியதாக போலீசில் சிக்கினார்.

அப்போது அவர் போலீசாரிடம், ‘என்னை ஜெயிலுக்கு அனுப்புங்கள். வீட்டிற்கு போக விரும்பவில்லை’ என்று கெஞ்சியதுடன், ஒன்றாக தங்கியிருக்கும் நண்பர்களே தன்னையும், குழந்தையையும் சிறை வைத்து அளித்த கொடுமைகளை அம்பலப்படுத்தினார்.

இந்த கொடுமை தொடர்பாக ஜெசிகா ஹன்ட்(31) என்ற பெண்ணும், 2 ஆண்களும் சிக்கி இருக்கிறார்கள். இவர்கள் மீது போலீசார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top