தலைவெட்டப்பட்ட கோழிகள், சேவல்களுக்கு
சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடிதுடித்தவாறு சிறிதுதூரம் ஓடிச்செல்லவும் கூடும் என்பதை பலர் அறிந்திருப்பீர்கள். ஆனால்,
தலையை இழந்த சேவலொன்று ஒன்றரை வருடகாலம் உயிர்வாழ்ந்தது என்றால் நம்ப முடியுமா? நம்ப முடிகிறதோ இல்லையோ அப்படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்தமை உண்மை வரலாறாக உள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள புரூடிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தது அச்சேவல். அதற்கு “மைக்” எனப் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் “அதிசய சேவல் மைக்” என அழைக்கப்பட்டது.
தலையை இழந்தமை
1945 செப்டெம்பர் 10 ஆம் திகதி, புருட்டிடா நகர விவசாயியான லொய்ட் ஒல்சென் என்பவரின் வீட்டுக்கு அவரின் மாமியார் சென்றிருந்தார். அவருக்கு விருந்தளிப்பதற்காக கோழியிறைச்சி கொண்டு வருமாறு ஒல்செனை அவரின் மனைவி கோரினார். ஐந்தரை மாத வயதுடைய மைக் எனும் சேவலை ஒல்சென் தெரிவுசெய்தார்.
அச்சேவலை அவர் தலையின் ஓரமாக வெட்டமுயன்றபோது, ஒல்செனின் கைக்கோடரி நழுவியதால் சேவலின் கழுத்துக்கூடாக செல்லும் நாடி தப்பியது. அதன் ஒரு காது மற்றும் மூளையின் ஒருபகுதி ஆகியன பாதிக்கப்படாமல் இருந்தன. (குருதிக்குழாயில் ஏற்பட்ட அடைப்பொன்றின் காரணமாக அதற்கு குருதிப்பெருக்கு ஏற்படவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.)
அதனால் அச்சேவல் தடுமாறி நடக்கத் தொடங்கியது. அது கூவுவதற்கும் முயன்றது. ஆனால் அது முடியவில்லை. எனினும், சேவல் உயிரிழக்காததால் வியப்படைந்த ஒஸ்லென் அதனை கவனமாக பராமரிக்கத் தீர்மானித்தார்.
கழுத்துப்பகுதியிலுள்ள உணவுக்குழாய்க்குள் பால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை “ஐ ட்ரொப் ஸ்ரிஞ்சர்” மூலம் செலுத்தினார். சிறிதளவு அரைத்த சோளத்தையும் அவர் கழுத்திலுள்ள உணவுக்குழாய் வழியாக ஊட்டினார்.
இதனால் அச்சேவல் மேலும் வளரத் தொடங்கியது. ஏனைய கோழிகள், சேவல்களுடன் வளர்க்கப்பட்ட அச்சேவல் அதிகாலையில் கூவவும் செய்தது. அதன் தொண்டையிலிருந்து சத்தம் எழுந்தது. ஏனைய சேவல்கள் கூவும் ஒலியைப் போல் அது இருக்கவில்லை.
பிரபலம்
சில மாதங்களில் இச்சேவல் குறித்த தகவல்கள் அமெரிக்காவெங்கும் பரவத் தொடங்கின. பெரும்பாலானோர் அவற்றை கட்டுக்கதைகள் எனக் கூறி நம்ப மறுத்தனர்.
அதையடுத்து, உண்மையை நிரூபிப்பதற்காக அச்சேவலின் உரிமையாளரான ஒஸ்லென் அதை சோல்ட்லேக் நகரிலுள்ள உட்டா பல்கலைக்கழகத்துக்கு கொண்டு சென்றார். இச்சேவல் குறித்த தகவல்கள் உண்மையென நிரூபிக்கப்பட்ட பின்னர் இரண்டு தலையுடைய கன்றுக்குட்டி போன்ற விநோத மிருகங்கள், பிராணிகள் சகிதம் ஊர் ஊராக கொண்டுசெல்லப்பட்டது.
0.25 டொலர் கட்டணம் செலுத்தி இச்சேவலை பார்க்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் புகழ் உச்சத்திலிருந்த காலத்தில் மாதாந்தம் 4,500 டொலர் வரை அது திரட்டியது. தற்போதைய பெறுமதியுடன் ஒப்பிட்டால் அது 48,000 டொலர்களுக்கு (சுமார் 60 இலட்சம் இலங்கை ரூபா) சமனாகும்.
டைம், லைவ் உட்பட புகழ்பெற்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளில் இச்சேவலின் புகைப்படங்கள் வெளியாகின.
மைக்கின் புகழ் வெகுவாக பரவியிருந்ததால், வேறு பலர் சேவல்களின் தலையை அரைகுறையாக வெட்டி மைக் போன்ற தலையில்லா சேவல்களை உருவாக்க முயன்றனர். ஆனால் அவை ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்கவில்லை.
1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சுற்றுலாவொன்றின் பின்னர் திரும்பிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் அச்சேவல் சுவாசிப்பதற்குத் திணறியது. அதேவேளை, அச்சேவலுக்கு உணவூட்டும் மற்றும் தூய்மைக்கும் ஸ்ரிஞ்சர்களை கண்காட்சிக்கூடமொன்றிலேயே மறதியாக விட்டுவிட்டு வந்திருந்தார் ஒல்சென். அதனால் அச்சேவலை காப்பாற்ற முடியவில்லை.
எனினும் தான் அச்சேவலை விற்றுவிட்டதாக மற்றவர்களிடம் ஒல்சென் கூறினார். அதனால் அச்சேவல் சுற்றுலாக்களில் பங்குபற்றிக்கொண்டிருப்பதாக 1949 ஆம் ஆண்டுவரை பலர் நம்பினர்.
கொலராடோ மாநிலத்தின் புரூட்டிடா நகரில் 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மே 3 ஆவது வார இறுதிநாள் “மைக் தலையற்ற சேவல் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது. தலையற்ற கோழிகள் போன்று ஓடுதல் உட்பட பல்வேறு விநோத விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.