புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்தநிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார்.

இந்தநிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில்,

பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம்.

அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் எனக்கு நல்ல நெருக்கம் உள்ளது.

இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார்.

நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு,

நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார். 
 
Top