மேற்கு டெல்லியில் வசிக்கும் பேச முடியாத 13 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமுகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் லொரிகளை நிறுத்தி வைத்திருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த மூன்று சாரதிகள், பேச முடியாத அந்த 13 வயது பெண்ணை தனிமையான ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே அந்த சிறுமியை மூவரும் மாறி, மாறி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர்.
அவர்களிடம் இருந்து விடுபட முயன்ற சிறுமியின் முனகல் குரல் கேட்டு அவ்வழியாக சென்ற ஒரு பெண் இந்த கொடுமையை பார்த்து விட்டு கூச்சலிட்டபடியே அந்த காமுகர்களை விரட்டினார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை விரட்டிச் சென்றனர். தப்பியோடியவர்களில் ஒரு சராதி மட்டும் ஊர் மக்களிடம் பிடிபட்டான்.
அவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, பிடிபட்ட சாரதியிடம் விசாரணை நடத்திய பொலிஸார், தப்பியோடிய மேலும் இருவரை பிடிப்பதற்காக அரியானாவுக்கு சென்றுள்ளனர்.