காதலித்து திருமணம் செய்த மகளை, தந்தை ஒருவர் பாசமாக பேசி, வரவழைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இந்தியாவின் நாசிக் மாவட்டம் ஹனுமான்வாடியை சேர்ந்தவர் ஏக்நாத் கிஷ்ன கும்பார்கர் (வயது 38), இவரின் மகள் பாமா காம்ளே (வயது 18).
பாமா பெற்றோரின் விருப்பத்திற்காக மாறாக, வேறு சாதியை சேர்ந்த தீபக் காம்ளே என்பவரை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மகள் மீது தீராக வெறுப்பில் இருந்த தந்தை, பாமாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, உன் பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை, நீ வந்தால் உதவிகரமாக இருக்கும் என பாசமாக பேசி நடித்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது இருவரும் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே, ஏக்நாத் தன் மகள் பாமாவை கயிற்றால், கழுத்தை பலமாக இறுக்கினார்.
பதறிப் போன சாரதி அவரை தடுக்க முற்பட்டும் முடியவில்லை. அதற்குள் பாமா மயக்கமடைந்ததால், ஏக்நாத் அங்கிருந்து தப்பி ஓடினார்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாமா பரிதாபமாக உயிரிழந்தார்.