புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐரோப்பாவிலேயே மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்த இடமாக லண்டன் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, கொடூரமான காலநிலை போன்றவையே இதற்கான முக்கியமான காரணங்களாக சொல்லப்படுகின்றன.
பத்தில் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் உடனடியாக பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய எல்லை அதிகரிப்பு, நீண்ட மணி நேர வேலை அதிகரிப்பு போன்றனவும் முக்கிய காரணங்களாக உள்ளன.
மக்கள் வாழ்வதற்கு ஏற்ற ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் முதலிடத்திலும், ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும், இத்தாலி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஆக ஐந்து வீதமான பிரிட்டன் மக்களே சந்தோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பார்த்தீர்களா பிரித்தானிய மக்களின் மன நிலையை? இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சையாக தான் தெரியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top