புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நவநாகரீக பெண்கள் என்றாலே உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்
என்றால் அது மிகை ஆகாது.இத்தகைய பெண்கள் விரும்பி அணிபவைகளில் ஒன்று தான் குதிகால் உயர்ந்த காலணிகள். ஆனால் இந்த நெட்டைக் கொக்கு காலணிகளால் உடல்நலத்துக்கு பாதிப்பு 
ஏற்படுகிறது என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
காலணியின் அதிக உயரமானது மூட்டு இணைப்புக்கும் அதனுடன் இணைந்த இழைகளுக்கும் அதிக கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. தொடையின் முன்பகுதியில் உள்ள தசைகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.
குதிகால் உயர்ந்த காலணிகளால் முன்னங்கால்களுக்கு அதிகரிக்கும் அழுத்தமானது மயிரிழை எலும்பு முறிவு, கட்டை விரல் வீக்கம், கால் விரல்கள் முன்புறம் வீங்குவது போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது.
“ஹை ஹீல்ஸ்” அணியும் பெண்களுக்கு பொதுவாக மூட்டு வலியும் காணப்படுகிறது என்று கூறுகிறார் மூட்டு சிகிச்சை நிபுணரான அஷிஷ் ஜெயின். குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதால் ஏற்படும் வலியைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி அவற்றை அணியாமல் இருப்பதுதான்.
அது முடியாமல் போனால் ஒரு இஞ்சுக்கு மேல் இல்லாத ஹை ஹீல்சை அணியலாம் என்பது மருத்துவர்களின் முடிவான கருத்து.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top