புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியப் பெண் ரம்யா, ஆங்கிலக் கால்வாயில் நீந்தி சாதனை படைத்துள்ளார். பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையே, 560 கிலோ மீட்டர் நீளமும், 240 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது ஆங்கிலக் கால்வாய். அட்லாண்டிக் கடலின் ஒரு பகுதியாக உள்ள இந்தக் கால்வாயில், ஜெல்லி மீன்கள் அதிகம். அதுமட்டுமல்லாது,
இந்தக் கால்வாயில் அலைகளின் வேகம் அதிகம்; வெப்பநிலை எப்போதும் பூஜ்யம் டிகிரியில் இருக்கும்.
இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரி ராஜசேகரின் மகள் ரம்யா. 18 வயதான ரம்யா நீச்சல் வீராங்கனை. பிரிட்டனை சேர்ந்த பயிற்சியாளர் பியோனாவின் துணையுடன், ரம்யா நேற்று முன்தினம் மதியம் பிரிட்டனின் டோவர் பகுதியில் உள்ள ஆங்கிலக் கால்வாயில் நீந்தத் துவங்கி, பிரான்சில் உள்ள ஆங்கிலக் கால்வாய் பக்கம் நேற்று காலை வந்தடைந்தார்.

"மனோ திடம் இருந்த காரணத்தால், இந்தச் சாதனையைச் செய்ய முடிந்தது' என, ரம்யா தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top