புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இமாலயப் பகுதி மற்றும் சைபீரியப் பகுதிகளில் அந்நியமானதும் புதிரானதுமான கால் அடையாளங்களைக் கொண்ட பனிமனிதர்கள் உண்மையில் இருக்கின்றார்கள் என பனிமனித வேட்டையாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச விஞ்ஞானிகள் குழு இணைந்து மேற்கொள்ளும் பனிமனிதத் தேடுதலில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது
இவ்வேட்டையில் ரஷ்யாவுடன் அமெரிக்காவும் இணைந்து செயல்படுகின்றது. இந்த இடத்தில் 30 பனிமனிதர்கள் காணப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  இந்த மனித மிருகங்களின் வகையைக் கண்டுபிடிக்க 1958 லிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதலானது கெமறோவோ பிராந்தியத்தில் காணப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பகுதி மொஸ்கோவின் கிழக்காக 3000 மைல் அப்பால் உள்ளது.

பனிமனிதர்கள் உயரமாக இருந்தாலும் அவ்வளவு இராட்சதர்கள் போல் இல்லையென்றும் இவர்களுக்குக் கரடியைப் போல் நீண்ட முடி காணப்படுவதாகவும் இதனைக் கண்ட ஒருவர் தெரிவித்தார். இது மனிதனைப் போலவே நடப்பதாகவும் 7 அடி உயரமாக இருக்கலாம் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவர் இளம் பனிமனிதனைக் கண்டிருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். கெமறோவோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் தலைவரான ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் குறிப்பிடுகையில் இவை சுரங்கப் பகுதிகளில் வாழலாமென்றும் இவை கிராமங்களுக்குள் வந்து செம்மறியாடுகளையும் கோழிகளையும் களவெடுப்பதாக அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்ததாகவும் இவர் கூறினார்.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top