புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


படத்தின் மீது அழுத்தவும் 
உலகின் மிக நீண்ட பாலம் சீனாவில் உள்ளது.   அதனுடைய நீளம் 26 . 4  மைல் என்பது பெரும் வியப்பு.  110  அடி அகலமானது இந்த பாலம். அது கடலின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பது அதைவிட பெரும் வியப்பு.  சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கிங்க்டாவ் நகரத்தையும் ஹோங்க்டாவ் என்ற தீவையும் இந்த பாலம் இணைக்கிறது.



5000  தூண்கள் தாங்கி நிற்கும் இந்த அதி நவீன பாலம் £960  மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.   கடலுக்குள்ளே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது இந்த பாலத்தின் மேல் தான்

ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களில் இருந்தும் இரண்டு வெவ்வேறு குழுக்களால் இந்த பால வேலை 2006 ல் ஆரம்பிக்கப்பட்டது.  சரியாக நடுக்கடலில் இந்த பாலம் இணைக்கப்பட்டது வியப்பு தானே.  லண்டனில் உள்ள TOWER பாலத்தை விட 174  மடங்கு இது நீளமானது.

சிறப்பு தகவல் :  இந்த மிக நீண்ட பாலத்தின் சாதனை வெகு விரைவில் முறியடிக்கபட போகிறது.  அதாவது 30 மைல் நீளத்தில் கிட்டத்தட்ட £6.5 பில்லியன் செலவில் இன்னொரு பாலத்தின் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.  2016 ல் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.  அதுவும் சீனாவில் தான்.

ஆனால் அந்த சாதனையையும் முறியடிக்க அடுத்த திட்டம் உருவாகியுள்ளது.  102  மைல் நீளத்தில் ஒரு பாலம் அமைத்து danyang  மற்றும் kunshan  பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   அதுவும் சீனாவில் என்பது வியப்புக்குரியது தான்.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top