புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகம் வாழ் தமிழர்கள் அனைவரும் தைப்பொங்கல் திருநாளை வெகு குதூகலமாகக் கொண்டாடுகின்றனர்.இச்சமயத்தில் எமது இணையத்தள  வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில்
பெருமகிழ்ச்சியடைகின்றோம்.ஆண்டுதோறும்
தை
மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதலாந் திகதியை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை ‘மகர சங்கராந்தி தேவதை’ என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனி பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை- தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.

இத்தகைய புண்ணிய தினமான சங்கராந்தியன்று சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்திர அயனம் என்று பெயர். இத்தினத்தில் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.
இன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும்.எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது. வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. “நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே”என்று வேதம் கூறுகிறது.மேலும், சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை 

“ஓம் ய ஏஷோந் தராதித்யே ஹிரண்மய புருஷ” எனப் புகழ்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு தமது நன்றியை மக்கள் தெரிவிக்கின்றனர்.தை மாதம் முதல் திகதியான மகர சங்கராந்தி தினத்தன்று திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இறைவன் சிறப்பாக ஆராதிக்கப்பட்டு தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. தைப்பொங்கல் தினத்தன்று நாம் அனைவரும் சூரிய வழிபாடு செய்து, கிரக தோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவோமாக! 

1 கருத்து:

  1. அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்"

    பதிலளிநீக்கு

 
Top