புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுரங்கம் தோண்டி சென்று ஏடிஎம்.மில் ஆசாமிகள் கொள்ளை அடித்தனர். ஆனால், சொற்ப பணம் இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ளது பாலோபீல்ட். இங்குள்ள ரயில் நிலையத்துக்கு அருகில் பல கடைகள் உள்ளன. ஒரு
கடைக்கு பின்புறத்தில் இருந்து அருகில் உள்ள ஏடிஎம் மையம் வரை ஆசாமிகள் சிலர் நிலத்தில் சுரங்கம் தோண்டி உள்ளனர். ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டு 100 அடி தூரத்துக்கு சுரங்கம் தோண்டி, ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்துள்ளனர். இதுகுறித்து சிஐடி புலனாய்வு பிரிவு அதிகாரி செர்ஜன்ட் இயான்ஷோர் கூறியதாவது:
எனது அனுபவத்தில் இதுபோன்ற ஒரு கொள்ளையை பார்த்ததில்லை. ஏனெனில், ஏடிஎம் மையம் வரை 100 அடி தூரத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். 4 அடி உயரத்துக்கு சுரங்கம் தோண்டி மின்விளக்குகளும் பொருத்தி உள்ளனர். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். மேலும், ஏடிஎம் மையத்தின் தரை 15 அங்கும் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டி வந்து இயந்திரங்கள் மூலம் கான்கிரீட்டில் துளை போட்டுள்ளனர். அதன்பின் ஏடிஎம் இயந்திரத்தல் கொள்ளை அடித்துள்ளனர்.
ஏராளமாக பணம் செலவு செய்து, ஆறு மாதங்களுக்கு மேல் சுரங்கம் தோண்டி பெரும் தொகை கொள்ளை அடிக்கலாம் என்று கொள்ளையர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், ஏடிஎம்.மில் வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே இருந்துள்ளது. இதில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகிறோம்.
இவ்வாறு இயான்ஷோர் கூறினார்.
கடந்த 2007ம் ஆண்டே இந்த ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிக்க 60 அடி தூரத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அப்போது பில்டர்கள் அதை கண்டுபிடித்து விட்டனர். அதன்பின் திட்டத்தை கைவிட்டுள்ளனர். ஆனால், 4 ஆண்டு கழித்து அதே இடத்தில் இப்போது சுரங்கம் தோண்டி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top