புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையில் அதிகரித்து வரும் விபத்துக்களை குறைப்பதற்காகவும் போக்குவரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும் கட்டாய விதிகளில், மேலும் புதிதாக ஒரு விதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளது.இதன்படி வாகனங்களின்
ஹோன் சத்தமானது குறித்த வாகனம் நகரும்போது 105 டெசிபலை விட குறைவாக காணப்பட வேண்டும். அத்துடன் நிலையாக நிற்கும் வாகனங்களின் ஹோன் ஒலியானது 93 டெசிபலிற்கு குறைவாக காணப்பட வேண்டும் என்பதே அப்புதிய போக்குவரத்து விதியாகும்.

இவ்விதியானது, மிக விரைவில் சுற்றுச்சூழல் அமைச்சினால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சின் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.இது ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகை போக்கிகளின் (சைலென்சர்) ஒலியை கட்டுப்படுத்தும் விதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top