புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் ஆப்பிள் ஐ போன் மற்றும் ஐபேட் வாங்குவதற்காக தன் சிறுநீரகத்தையே 17 வயது பள்ளி சிறுவன் விற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வரும் 17 வயது சிறுவன், திடீரென தனது சிறுநீரகத்தை 3,500 அமெரிக்க
டாலருக்கு விற்றுவிட்டான். அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சைக்கு பின் அவனது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டான். ஆன்லைனில் சாட்டிங் செய்த போது, சிறுநீரகம் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து உரியவர்களை தானே தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளான்.

அதற்கான விலையும் நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் சிறுநீரகத்தை விற்றுள்ளான் சிறுவன். இதுகுறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கிட்னி விற்ற பணத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் வாங்கி தனது நெடுநாள் ஆசையை சிறுவன் பூர்த்தி செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பான இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top