புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இன்றைய நவீன வாழ்க்கையானது எம் உறவுகளை திக்குதிசையில் வாழ வழி வகுத்திருக்கிறது.பணமே வாழ்க்கையின் மூலதனமாக உள்ள கால கட்டத்தில் நாம் அதற்கேற்றால் போல் அதனை தேடி உலகமெங்கும் பறந்து வாழ்கின்றோம் .காகம் இல்லாத நாடு சொல்லலாம் நம் உறவுகள் இல்லாத நாட்டை சொல்ல முடியுமா? புரியாத மொழி ,பழகாத இனம் உள்ள நாட்டிலே வாழும் எம்முறவுகள் படும் இன்பதுன்பங்கள் பற்றி ஆராயுமிடத்து

அன்றைய காலத்தில் எம்முறவுகள் நாட்டில் ஏற்பட்ட பொருட்களின் விலை அதிகரிப்பும்,தாம் சம்பாதிக்கும் பணம் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றமுடியாமல் இருந்த கால கட்டத்தில் இதனை நிவர்த்தி செய்ய வழி தேடி திரிந்த அன்றைய கால கட்டத்தில் அதற்கு எண்ணெய் ஊற்ற வந்ததுதான் வெளிநாடு வேலை வாய்ப்புக்கள்.

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கள் இருந்தாலும் செல்வதற்கு பணமில்லாமையால் தாம் இருந்த வீடுகள் ,மற்றும் நகைகள் என இன்னோரன்ன பொருட்களை ஈடு வைத்து வெளிநாடு செல்ல ஆயத்தமாகினர்.உறவுகளின் கூட்டு முயற்சியால் ஒருவர்பின் ஒருவராக வெளிநாடு செல்ல தலைப்பட்டனர் ,அன்றைய காலத்தில் வெளிநாடு செல்வதென்றால் இன்றைய காலம்போல் அல்ல நாட்டில் இருந்து வெளிக்கிட்ட உறவு வெளிநாட்டை சென்றடைய நீண்ட காலங்கள் ஆகும் .ஏனெனில் இன்றைய காலம் போல விசா எடுத்து விமானத்தில் ஆசனத்தில் அமர்ந்து பறந்து வார காலமல்ல ,ஒளிச்சு ஒளிச்சு கப்பலில் வந்த காலமது ,சாப்பாடு இன்றி தகரங்களில் அடைபட்டு பொருட்கள் ஏற்றும் கப்பலில் உயிரை பணயம் வைத்து வந்தது ஒரு புறமிருக்க இன்னோரன்ன கஸ்ரங்களை அனுபவித்து வந்த காலமது .

மேலும் இவ்வாறான கஸ்ரங்கள் ஒரு புறமிருக்க உறவுகளை பிரிந்து வருகின்றோமே என்ற மன உளைச்சல்களின் மத்தியில் வெளி நாடு வந்த அவர்களிற்கு அதிர்ச்சிகள் பல காத்திருந்தன .வெளிநாட்டில் காலடி வைத்த எம்மவர்களிற்கு தஞ்சம் புகுந்து அவர்களின் ஒத்துழைப்புடன் சில உறவுகளை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் ,தவிர நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளை காட்டி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக சிலர் பதியப்படனர் .அங்கு இவர்களிற்கு ஒரு முகாமைத்து கொடுத்து அவர்களிக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் வழங்கினார்கள் .ஆயினும் இவர்களிற்கு கட்டுபாடுகளும் இருந்தது குறிப்பாக
  • குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழ வேண்டும்
  • தொழில் நடவடிக்கையில் நிரந்தர குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே ஈடுபட முடியும்
  • வெளிநாட்டு மொழியை கற்க வேண்டும்
  • குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நாட்டில் இருக்க முடியும்.(இதற்கு மாற்றீடாக இன்று குழந்தை வளரும் வரை நாட்டில் இருக்கலாம் )
இவ்வாறான எதிர்நோக்கல்கள் ஒரு புறமிருக்க தாம் வந்த நோக்கம் நிறைவேற்ற மொழி வேறு இனம் வேறு பணம் சம்பாதிக்க இவை தடைகளாக இருந்தன  .இனம் வேறு ஒரு தடையல்ல என்பதை வெளிநாட்டவர்கள் புலப்படுத்தியதன் முகமாக மொழிதான் தேவை என்பதை உணர்ந்த எம்மவர்கள் அதனை கற்று கொள்ள பட்ட கஸ்ரங்கள் கொஞ்சம் நெஞ்சமில்லை இவ்வாறு ஓரளவிற்கு மொழியை கற்றுணர்ந்து இவர்கள் வேலை தேடும் முயற்சியில் இறங்க காத்திருந்தனர்.

வெளிநாட்டவர்களும் சம்பளம் குறைந்த வேலையாட்களை தேடி திரிந்த காலம் இவர்களும் அதற்கேற்றால் போல் தலைப்பட்டனர் .இவ்வாறாக இவர்களின் தொடர்புகள் ஊருக்கு கிடைப்பதென்றால் அன்றைய கால கட்டத்தில் காகிதமே .அது நாட்டை சென்றடைய பால் புளிச்சு ,தயிராகி;வெண்ணெய் ஆகிவிடும் ..இப்பட்டியான உறவுகளிற்கு இடையிலான விரிசலிற்கு முதற்படி இது

தொடரும் ........
சாந்தை வாசி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top