
இந்த சம்பவம் குறித்து அரலகங்வில பொலிஸ் நிலையத்திற்கு நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவம் 2012-05-14ஆம் திகதியன்று சிறுமியின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறு வல்லுறவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபரான 13 வயது சிறுவன் இன்று (17) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக அண்மையில் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு இலங்கையில் அன்றாடம் நடைபெற்று வரும் சம்பவங்கள் வலுசேர்க்கின்றன.
ஊடகங்களில் அடிக்கடி அதிகமாக வெளியிடப்படும் விபத்துச் செய்திகளுக்கு அடுத்தபடியாக இந்த துஷ்பிரயோகச் செய்திகள் மாறிவிட்டன.
0 கருத்து:
கருத்துரையிடுக