புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலவிதமான வசதிகளில், அதன் மொழி பெயர்க்கும் வசதியும் ஒன்று.மிகத் துல்லியமாக மொழி பெயர்க்காவிட்டாலும், பொருள் புரிந்து கொள்ளும் வகையில் இதன் மொழி பெயர்ப்பு உள்ளதாக, உலகமெங்கும் உள்ள பல மொழி
வாடிக்கையாளர்கள் கூறி உள்ளனர்.

ஓராண்டில் உலகெங்கும் உள்ள மொழி பெயர்ப்பாளர்கள் மேற்கொள்ளும் மொழி பெயர்ப்பினைக் காட்டிலும், ஒரே நாளில் கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்ப்பது அதிகம் என கூகுள் அறிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் 20 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றனர். சராசரியாக, பத்து லட்சம் நூல்களில் நாம் சந்திக்கக் கூடிய சொற்களுக்கு இணையாக, கூகுள் ட்ரான்ஸ்லேட் சாதனம் ஒரு நாளில் மொழி பெயர்க்கிறது.

இந்த வகையில் பார்த்தால் நம் பூமியில், கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தான் அதிக அளவில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது எனலாம்.

2001ஆம் ஆண்டு கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலத்திலிருந்து எட்டு மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் வசதி தரப்பட்டது. அதன் பின்னர், மொழி பெயர்ப்பில் வேகம் மற்றும் துல்லியம் தரும் வகையில் தன் சேவையினை மேம்படுத்தியது கூகுள்.

பின்னர் படிப்படியாக கூடுதலான மொழிகள் இணைக்கப்பட்டன. இன்று 64 மொழிகளில் கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்க்கிறது. இவற்றில் அஸர்பெய்ஜான், ஐஸ்லாண்டிக், ஸ்வாஹிலி, பெங்காலி, பாஸ்க் மற்றும் வெல்ஷ் ஆகியவையும் அடங்கும். ஒரு வாக்கியத்தை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மொழி பெயர்த்துத் தரும் திறனை கூகுள் உருவாக்கியுள்ளது.

இதனைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் தாங்கள் பயணத்தில் இருக்கையில் மேற்கொள்கிறார்கள். 92% மேலான மொழி பெயர்ப்பு பணிகள் அமெரிக்காவிற்கு வெளியே தான் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வசதி மொபைல் போன்களில் டெக்ஸ்ட் மொழி பெயர்ப்புக்கும் தரப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் வழி எந்த ஓர் இணைய தளத்தினையும் மொழி பெயர்த்துக் காணலாம்.

கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் ஓரளவிற்கே மொழி பெயர்க்க இயலும். முழுமையான பொருள் மாற்றம் கிடைக்காது. அது மனிதர்களால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top