புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நேபாள நாட்டில் பனிப்பாறைகள் நிறைந்த ஏரி திடீரென உடைந்த காரணத்தினால், 13 பேர் பலியாயினர், 60 பேரை காணவில்லை.
நேபாளத்தின் காஸ்கி மாவட்டத்தில் இமாலய மலைத் தொடரில் பனிப்பாறைகள் நிறைந்த ஏரி உள்ளது.

இது நேற்று திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்குள்ள சேதி நதியில் வெள்ளம் அதிகரித்து சார்டிகோலா கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது.

வெள்ளத்தில் வீடுகள், பண்ணைகள், கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளநீரில் மூழ்கி 13 பேர் பலியாகினர். ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் மூவர் உட்பட 60 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இராணுவத்தினரும், பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மீட்புபணியில் இராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தில் லாரிகளும், பஸ்களும் கூட அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகி இதுபோன்ற வெள்ள அபாயம் ஏற்படும் என ஏற்கனவே வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top