
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரின் ஹார்வேர்டு ஆண்கள் விடுதி அறையில் தங்கியிருந்தவர் மார்க் சக்கெர்பெர்க். அவரது சிந்தனையில் தோன்றிய சமூக இணைய தளமான பேஸ்புக், கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 90 கோடி உறுப்பினர்களை கொண்டுள்ளது.
இந்த அசுர வளர்ச்சியை பெற்றுள்ள பேஸ்புக், தன்னுடைய வளர்ச்சியை மேலும் அதிகரிக்க அதை அமெரிக்க பங்கு சந்தையில் பதிவு செய்து புதிய பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஃபேஸ்புக் மொத்தம் 33.74 கோடி பங்குகள் வெளியிட்டு ரூ.57,000 கோடி நிதி திரட்ட உள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.1,500 முதல் ரூ.1,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மே 18ம் திகதியிலிருந்து ஃபேஸ்புக் பங்குகள் சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. அதன்மூலம் பேஸ்புக் இங்க் நிறுவன சந்தை மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.18 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தின் மிகப் பெரிய பங்கு வெளியீடாக இது இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக