புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மாயன் காலண்டரில் 2012ஆம் ஆண்டுடன் உலகம் அழிந்து விடும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால், உலகம் அழியக் கூடும் என்ற பயம் அனைவரையும் சூழ்ந்துக் கொண்டுள்ளது.மாயன்களின் காலண்டரை அடிப்படையாக வைத்து பல புத்தகங்களும், பல சினிமாக்களும் கூட வந்துள்ள நிலையில் குவாதமாலாவில் மாயன்களின் பழைய காலண்டரை அமெரிக்கா அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து இவர்கள் கூறுகையில், 9வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் இக்காலண்டரில் சந்திரனின் சுழற்சி காலங்களோடு, வீனஸ் மற்றும் மார்ஸ் போன்ற கிரகங்களின் சுழற்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2012ல் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் மாயன்களின் காலண்டரில் 13 பக்தூன்கள்(1 பக்தூன் – 400 வருடங்கள்) வரை மட்டுமே உலகம் இருக்கும் என்று எழுதியுள்ளதாகவும், அது 2012ன் முடிவடைவதாகவும் கூறி வந்தனர்.

இச்சூழலில் தற்போது கிடைத்துள்ள காலண்டரில் 17 பக்தூன்கள் வரை காலண்டர் உள்ளதாகவும், அவற்றில் கூட 17 பக்தூன்களோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.


மேலும் தற்போது ஏராளமாக கிடைத்துள்ள ஆவணங்களை முறைப்படுத்தி ஆராயும் போது நிறைய உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top