
கடந்த 2010ஆம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பல்கலைக்கழக விடுதியில் தருண் தங்கி படித்தார். இவரது அறையில் தங்கியிருந்தவர் டெய்லர் கிளமென்டி.
டெய்லர் கிளமென்டிக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டு. தருண் வெளியே செல்லும் நேரத்தில் டெய்லர் ஓரினச் சேர்க்கை நண்பர்களுடன் உறவு கொள்வது வழக்கம்.
வெளியே சென்ற நேரத்தில் கணணி வெப் கேமராவை ஆன் செய்து விட்டு, டெய்லரின் செயல்பாடுகளை இரகசியமாக எடுத்துள்ளார் தருண். இதை டிவிட்டர் சமூக வளைதளத்தில் வெளியிட்டார், தருண்.
நண்பர்களுக்கெல்லாம் இந்த விஷயம் தெரிந்ததைக் கண்டு டெய்லர், ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டெய்லர் தற்கொலை செய்து கொள்ள, தருண் தூண்டுகோலாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெய்லரின் அந்தரங்க உறவை பகிரங்கப்படுத்தியது உள்ளிட்ட 15 வழக்குகள் தருண் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. நியூஜெர்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடக்கிறது. தருண் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.
இதற்கிடையே நியூஜெர்சி மாகாண அரசு வழக்கறிஞர் தருணுக்கு சிறை தண்டனை அளித்தே ஆக வேண்டும் எனக் கோரி 14 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தருண் ரவிக்கு, ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது எந்த வெறுப்பும் கிடையாது. இது தொடர்பாக அவர் யாரையும் கிண்டலடித்தது கூட கிடையாது என அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும் என தருண் தரப்பில் அவரது வழக்கறிஞர் 33 பக்க அறிக்கையை, கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.
தருண் செய்த குற்றத்துக்கு, அவர் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படலாம். இதை தவிர்க்க அவர் 600 மணி நேரம் சமூக சேவையாற்ற வேண்டும். வரும் 21ஆம் திகதி அவருக்கு அளிக்கப்பட உள்ள தண்டனை விவரம் வெளியிடப்பட உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக