புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பணிப்பெண்கள் எஜமானரால் துன்புறுத்தப்படுவதும் பின்னர் எஜமானர்களை பணிப்பெண்கள் பழிவாங்குவதும் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது.ஐக்கிய அரபு இராச்சிய எஜமானரின் உணவுகள், குடிபானங்கள் ஆகியவற்றுக்குள்
தலைமயிர் துண்டுகள், உள்ளாடைத் துண்டுகள் ஆகியவற்றை கலந்து கொடுத்து வந்த இந்தோனேஷிய பணிப்பெண் ஒருவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் தண்டனைக் காலத்துக்கு பின் நாடு கடத்தப்படுவார் என்றும் தீர்ப்பில் எழுதப்பட்டு உள்ளது. Kalba இல் உள்ள வீடு ஒன்றில் இவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்திருக்கின்றார்.எஜமானரின் குடும்பத்தை வசப்படுத்த வேண்டும் என்கின்றமைக்காக மந்திரவாதத்தின் பெயரில் சொந்த தலைமயிர்கள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக்கி சாப்பாட்டிலும், தேநீர், கோப்பி போன்றவற்றிலும் கலந்து கொடுத்து வந்திருக்கின்றார்.

இவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து வந்திருக்கின்றார். ஆயினும் எஜமானரிடம் கையும்மெய்யுமாக பிடிபட்டுக் கொண்டார். எஜமானர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பணிப்பெண்ணும், பணிப்பெண்ணின் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த வேறு மூன்று பணிப்பெண்களும் பொலிஸாரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்த செய்தி Alitihad பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

எஜமானரிடம் கையும்மெய்யுமாக அகப்படுகின்ற வரை ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து தடவைகள் குடிபானங்களுக்குள் தலைமயிர் துண்டுகள், உள்ளாடைத் துண்டுகள் ஆகியவற்றை கலந்து பணிப்பெண் கொடுத்து வந்திருக்கின்றார் என்றும் ஏதோ தவறு நேர்கின்றது என எஜமானர் உணர்ந்து கொண்டார் என்றும் தலைமயிர்களை துண்டு துண்டுகளாக வெட்டி உள்ளாடைகளின் துண்டுகளுடன் சேர்த்து அவித்து உணவு, தேநீர், கோப்பி போன்றவற்றில் பணிப்பெண் கலந்தமையை எஜமானர் நேரில் கண்டு கொண்டார் என்றும் இச்செய்தி சொல்கின்றது.

எஜமானர்களை வசப்படுத்த வேண்டும் என்பதற்காக மந்திரம் செய்தார் என்று பணிப்பெண் விளக்கம் கொடுத்து இருக்கின்றார் என்றும் இச்செய்தி கூறுகின்றது.

இப்பணிப்பெண்ணுக்கு உதவி, ஒத்தாசையாக இருந்தனர் என்கிற குற்றச்சாட்டில் ஏனைய மூன்று பணிப்பெண்களுக்கு 1000 டிஹ்ராம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிய வந்து உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top