புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

 காளியம்மன் படத்துடன் தயாரிக்கப்பட்ட பியருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்தத் தயாரிப்பை குறித்த நிறுவனம் இடைநிறுத்திக் கொண்டது.அமெரிக்காவில் மதுபானம் தயாரிக்கும் Burnside Brewing நிறுவனம், சமீபத்தில் தனது புதிய பீர் வகையொன்றுக்கு “Kali-ma” என்று பெயரிட்டு சந்தையிடப்போவதாக அறிவித்தது.


இந்து தெய்வமான காளியின் பெயர் இந்த மதுபானத்துக்கு வைக்கப்பட்டமை இந்துக்களின் மனங்களை புண்படுத்துவதாக அமைந்தது. இதற்கு உலகளாவிய ரீதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், மதுபானத்துக்கு ஏற்கனவே சூட்டிய காளியின் பெயரை திரும்பப்பெறுவதாக அந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் கூறுகையில், “இந்து சமூகத்தினரிடமிருந்து வெளிவந்த கருத்துக்களை தொடர்ந்து, ‘காளிமா’ பீர் தயாரிப்பு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு வேறு பெயர் சூட்டும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். எந்த இனத்தையும், மதத்தையும் அவமதிக்க இந்த பெயரை சூட்டவில்லை. இந்தியானா ஜோன்ஸ் தொடர் படங்களை பார்த்ததின் தாக்கத்தால் இந்த பெயர் சூட்டப்பட்டது. யாரையும் அவமதிப்பதற்காக இந்த பெயரிடப்படவில்லை. இருப்பினும் இது குறித்து வந்த விமர்சனங்களால் அதன் பெயர் மாற்றப்படுகிறது” என தெரிவித்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top